ஆவடி ராணுவ இயந்திர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி!

சென்னைக்கு அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ இயந்திர தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி தொடர்பாக...
ஆவடி ராணுவ இயந்திர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி!
Published on
Updated on
1 min read

சென்னைக்கு அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ இயந்திர தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: Graduate Engineering Apprentice

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் , ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Diploma Technician Apprentice

காலியிடங்கள்: 5

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் , ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

காலியிடங்கள்: 60

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரீஷியன், எம்எம்வி போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பயிற்சிக்கு 2021, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.9.2025

உதவித் தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18,000 உதவித்தொகையும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 16,200, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.16,200 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பிஇ, டிப்ளமோ முடித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்களது விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். ஐடிஐ முடித்தவர்கள் www.appren ticeship.india.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வேண்டும். பின்னர், அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List- ஐ கிளிக் செய்து Engine Factory Avadi-ஐ தேர்வு செய்து விண்ணப் பிக்கவும். ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், சம்மந்தப் பட்ட டிரேடில் 1 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம்: www.boat-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய www.ddpdoo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Engine Factory Avadi has released the recruitment notification to fill the 81 Apprentice Posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com