தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

ஆப்செட் மிஷின் டெக்னீீசியன், இளநிலை மின்வினைஞர், இளநிலை கம்மியர், பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில்கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் சென்னை மற்றும் அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள ஆப்செட் மிஷின் டெக்னீீசியன், இளநிலை மின்வினைஞர், இளநிலை கம்மியர், பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர அறிவிக்கை எண். B2/19303/2025

பணி: உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன்( Assistant Offset Machine Technician)

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

அச்சிடும் தொழில்நுட்பம்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை மின்வினைஞர்(Junior Electrician)

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீஷியன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கம்மியர்(Junior Mechanic)

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன்(Plumber cum Electrician)

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பத்தோடு அளித்திருந்த அசல் சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.

நேர்முகத் தேர்வானது பத்தாம் வகுப்பு, தொழிற்கல்வி மற்றும் பட்டயப் படிப்பு நிலையிலான தரத்துடனும், அந்தந்த பதவிகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்வி, பொது அறிவு மற்றும் தமிழ்நாடு போன்ற பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கம்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான மாதிரி விண்ணப்பங்கள் பதவி வாரியாக தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் அதனை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்தில் சமீபத்தில் புகைப்படத்தை ஒட்டி அதில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

ஆணையர்,

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை - 2

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.9.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Tamilnadu Stationery and Printing Department has released the recruitment notification to fill the 56 Assistant Offset Machine Technician, Junior Electrician, Plumber cum Electrician, Junior Mechanic Posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com