தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணி
விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணி
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாவட்ட மகளிா் அதிகார மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மகளிா் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் 3 வருடம் தரவு மேலாண்மை, செயல் முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும். மேற்கண்ட கல்வித் தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூா் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாதம் ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.9.2025 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

Summary

VILLUPURAM DISTRICT HUB FOR EMPOWERMENT OF WOMEN APPLICATION REQUIRED FOR IT ASSISTANT FOR MISSION SHAKTI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com