ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும்.

பணி : ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025

Summary

GOVERNMENT OF TAMILNADU RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ DEPARTMENT Application for the Vacant Post at Panchayat Union Level

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com