சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான பி.குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 782 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 6,72,000 லிட்டா் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன்மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.
அதன்படி, புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 10 மாதங்களுக்கு ரூ. 45,000 ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையுடன் சேலம் ஆவின் நிறுவனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
மேற்கண்டபடி, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தோ்வில் பங்கேற்க காலை 11 மணிக்கு பொது மேலாளா், சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிட், சித்தனூா், தளவாய்ப்பட்டி (அஞ்சல்), சேலம் - 636 302 என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Aavin invites applications for 2 Veterinary Consultant posts on contract basis in Salem. Eligible veterinary graduates can attend the walk-in interview on Feb 13 at 11 AM at the Thalavaaipatti.
தொடர்புடையது

உலக கால்நடை மருத்துவ தினம்: செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

தினமணி எதிரொலி: ஆவின் அலுவலக விற்பனைப் பிரிவை அணுகி பால் அட்டை பெறலாம்!

ஐஓபி சூரமங்கலம் கிளை திறப்பு

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




