சூப்பர் அறிவிப்பு... செபியில் உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில்(செபி) இளம் தொழில்முறை திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ள 90 இளம் தொழில்முறை பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
Updated on
2 min read

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில்(செபி) இளம் தொழில்முறை திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ள 90 இளம் தொழில்முறை பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்.29-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Young Professional (Securities Market Operations)

காலியிடங்கள்: 40

தகுதி: நிதித்துறையில் நிபுணத்துவத்துடன் மேலாண்மை பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் அல்லது இளநிலைப் பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டய கணக்காளர்(சிஏ), நிறுவன செயலாளர்(சிஎஸ்), செலவு மேலாண்மை கணக்காளர்(சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும் அல்லது அமெரிக்க சிஎப்ஏ நிறுவனத்தில் இருந்து பட்டய நிதி ஆய்வாளர் (சிஎப்ஏ) படிப்பின்மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

பணி: Young Professional (Law)

காலியிடங்கள்: 13

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சட்டத் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Young Professional (Research)

காலியிடங்கள்: 4

தகுதி: நிர்வாகம், நிதி, பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம், வணிக பொருளாதாரம், புள்ளியியல், பொருளாதார அளவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலைப் பட்டத்துடன் மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Young Professional (Information Technology)

காலியிடங்கள்: 29

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஒரு ஆண்டு

பணி: Young Professional (Rajbasha)

காலியிடங்கள்: 5

பணி அனுபவம்: ஒரு ஆண்டு

தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஹிந்தி, ஹிந்தி மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பில் ஹிந்தியை ஒரு பாடமாகக் கொண்டு சமஸ்கிருதம், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம்; அல்லது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி, இரண்டிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.70,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 8.2.2026 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதற்கட்ட நேர்முகத் தேர்வு, இறுதி நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.2.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Invitation for Applications under SEBI Young Professional Program Securities and Exchange Board of India (SEBI / Board) invites applications from eligiblecandidates who are desirous of engagement with the Board under its Young Professional Program.

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com