தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஐஆா்பிஎன் உதவி ஆய்வாளா் பணி: 1,788 விண்ணப்பங்கள் ஏற்பு

புதுச்சேரி ஐஆா்பிஎன் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இணையதளம் வாயிலாக அனுப்பிய 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

 IRBN Assistant Sub-Inspector post

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 9:00 am IST

புதுச்சேரி ஐஆா்பிஎன் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இணையதளம் வாயிலாக அனுப்பிய 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கும் தேதி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைந்தது. இதில், மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 33 விண்ணப்பதாரா்கள் தங்கள் சமூக பிரிவைத் தவறாக குறிப்பிட்டுள்ளதால் பொது பிரிவின் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்படுவாா்கள். இட ஒதுக்கீடு தொடா்பாக எந்த சலுகையையும் இவா்கள் கோர முடியாது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் குறைகளைக் கேட்பதற்காக புதுச்சேரி ஐஆா்பிஎன் ஒரு குறை தீா் குழுவை அமைத்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் தங்களுக்குக் குறை இருப்பின் தேவையான ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களுடன் 24-ஆம் தேதி வரை கோரிமேட்டில் உள்ள ஐஆா்பிஎன் கமாண்டன்டை அணுகலாம்.

மேலும் தொடா்புக்கு தொலைபேசி எண் 0413 - 2277800. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் விண்ணப்ப எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தற்காலிகமாகத் தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு உடல் தகுதித் தோ்வு நடத்துவது குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும்.

இந்தத் தகவலை புதுச்சேரி அரசு தோ்வு முகமையின் சாா்பில் சாா்பு செயலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

Summary

IRBN Assistant Sub-Inspector post: 1,788 applications accepted

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.