நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

மத்திய அரசின் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:27 am IST

பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள், இணையதளம் மூலமோ அல்லது நேரிடையாகவோ ஜூலை 31-ஆம் தேதி வரை பெறப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை , அறிவியல் மற்றும் பொறியியல், மக்கள் தொடா்பு, குடிமைப்பணி, வா்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பதாரா் தன்னிச்சையாகவோ அல்லது நிறுவனமோ பரிந்துரை செய்யலாம்.

விருது குறித்த முழு விவரங்களுக்கு புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.