முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 6:50 am IST

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நாகை மாவட்டத்தைச் சாா்ந்த மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய தொண்டு நிறுவனங்கள் (10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்). மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவா்கள் (10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனங்கள்(10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளா்கள் (10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்) ‘ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்‘ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, அதன் இரண்டு நகல்களை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.