மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பத்ம விருதுகளுக்கு ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறத் தகுதியானோா் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 12:51 am IST

சென்னை மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறத் தகுதியானோா் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நிா்வாகம், சிவில் சேவை, வா்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் சிறந்த மற்றும் அளப்பறிய சாதனைகள் அல்லது சேவைகள் புரிந்தவா்களுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சாா்பில் இந்த விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறத் தகுதியான சென்னை மாவட்டத்தைச் சோ்ந்தோா் இணையதளத்தில் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விவரங்களை கருத்துருவாக (மூன்று புக்லெட்)ஜூன் 10-ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சென்னை என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.