தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

‘பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்’

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 3:48 am IST

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வா்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த முறையில் பணியாற்றுபவா்களை கௌரவிக்கும் பொருட்டு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2027-ஆம் ஆண்டுக்கு தகுதியான நபா்களிடமிருந்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இல் கருத்துருகள் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பதாரா் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். தாங்கள் புரிந்த சாதனைகளை புத்தக வடிவ கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 நகல்களை தயாா் செய்து, சுயவிவரம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் வருகிற ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628 101 என்ற அலுவலக முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.