பத்ம மற்றும் பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளுக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கியது.
விண்ணப்பத்தை சமா்ப்பிக்க ஜூலை 31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வா்த்தகம் மற்றும் தொழில்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபா்களை அங்கீகரிக்கும் வகையில் 1954-ஆம் ஆண்டு முதல் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பெறுவோரின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும்.
துணிச்சல், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் சாதனையாளா்களாக விளங்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகள் மற்றும் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளுக்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய விருதுகள் வலைதளத்தில் இணைய வழியில் சமா்ப்பிக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்ம விருதுகளுக்கு ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் 2026 - புகைப்படங்கள்

66 பேருக்கு பத்ம விருதுகள்: இன்று வழங்குகிறாா் குடியரசுத் தலைவா்

‘பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்’
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



