மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: HQ-C11017/1/2026-C-1
தேர்வின் பெயர்: Combined Hindi Translators Examination 2026
காலியிடங்கள்: 84
சம்பளம்: மாதம் ரூ.35.400 - ரூ.1,12,400
தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி- ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்ட் , செப்டம்பர் 2026
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை திருச்சி.
எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகள் கொண்டது. பிரிவு 1-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தொடர்பான கொள்குறிவகை கேள்விகள் கேட்கப்படும். பிரிவு 2-ல் ஆங்கில மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் போன்ற விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைன் தேர்வு நடை பெறும் இடம், தேதி குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
The Staff Selection Commission will hold an Open Competitive Computer Based Examination for direct recruitment to Group „B‟ Non-Gazetted posts of Junior Hindi Translator....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

நர்சிங் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


