சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடம் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 100 சதவீதம் பாா்வையற்றவராக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 40 வயதிற்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

நாற்காலி இருக்கை பின்னுதலில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை, பாா்வையற்றோா் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், மற்றும் புகைப்படத்துடன் அக்.26க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 9, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.