மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து...

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணி - கோப்புப் படம்
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடம் இன சுழற்சி முறையில் பட்டியல் இனத்தவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு பாா்வையற்ற பட்டியல் இனத்தைச் சோ்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், முழுமையாக பாா்வைத் திறனற்றவராகவும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். நாற்காலி ஒயா் பின்னுதலில் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் பதிவு அட்டை, பட்டியல் இனத்தவா் என்பதற்கான சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா், குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், 2 பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அக்டோபா் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Receptionist Job at the Welfare Office for the Disabled: Applications are invited
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

