
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தியதைப் பற்றி...

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டப் பணியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 வகையான மாற்றுத் திறனாளிகளை மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம். யுகந்தி முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் வி. ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலர் ஏ. கிருஷ்ணமுர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியரகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்து மனுக்களை வாங்க வேண்டும் என்று கூறி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
Summary
People with disabilities staged a protest by laying siege to the Villupuram District Collector's office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





