விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் போராட்டம்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தியது பற்றி...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள்... - DIN
விழுப்புரம்: விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றும் முடிவை கைவிடக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்குரைஞர்கள் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையில் இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதைக் கண்டித்து விழுப்புரம் வழக்குரைஞர்கள் ஏற்கெனவே நீதிமன்றப் பணிகளை புறக்கனித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம் கட்டடத்திலிருந்து புதன்கிழமை காலை ஊர்வலமாக புறப்பட்ட வழக்குரைஞர்கள், ரயில் நிலையச் சாலை, காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு வழியாக ஆட்சியரகம் வந்து நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
Summary
Lawyers stage a protest by laying siege to the Villupuram District Collector office
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






