விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் சுதந்திர நாள் விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வந்த ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மானை மாவட்டஎஸ்.பி. மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து காலை 9.05 மணிக்கு ஆட்சியர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. மதிவாணனுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார். பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, வனத்துறை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், இளம்செஞ்சிலுவைச் சங்கம், சாரண, சாரணிய இயக்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர் , அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
விழாவில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. மயிலம் சி. சிவகுமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அர அருளரசு, மாவட்ட வருவாய் அலுலவர் கி ,அரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி , வேளாண் இணை இயக்குநர் பி. சுரேஷ் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
Summary
Independence day celebration in villupuram district
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் சுதந்திர நாள் விழா கோலாகலம்: ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை!

சுதந்திர நாள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



