சுதந்திர நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சனிக்கிழமை (ஆக. 15) மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து, திறந்தவெளி வாகனத்தில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிகள், கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சுதந்திர போராட்ட தியாகிகள் வயது முதிர்வினை கருத்தில் கொண்டு விழாவிற்கு அழைத்து கௌரவிப்பது தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி தொல்காப்பியர் தெருவில் உள்ள லோகநாதன் என்கிற சுதந்திர போராட்ட தியாகிக்கு சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் ஆகியோர் நேரடியாக வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Summary
On the occasion of Independence Day, Ranipet District Collector N. Priya Ravichandran hoisted the national flag and paid her respects on Saturday (August 15).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம்!

சுதந்திர நாள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசா் முத்தையவேள் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju




