முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தெரிவித்துள்ள தனது வாழ்த்துகள் குறித்து...

PM Modi greets people on Independence Day

பிரதமர் நரேந்திர மோடி - டிஎன்எஸ்

Published On :

புது தில்லி: சுதந்திர நாளையொட்டி, மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அனைவருக்கும் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த, அளப்பரிய துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், 'வளர்ச்சியடைந்த இந்தியா' உருவாக்கும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.

140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் நாடு வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. வரும் காலங்களிலும் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமான வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னேறட்டும்," என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு தனது 80 ஆவது சுதந்திர நாளை கொண்டாடி வருகிறது.

Summary

Warm greetings on the occasion of Independence Day. We remember with gratitude the countless freedom fighters whose courage, sacrifice and unwavering commitment ensured the end of colonial rule

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.