நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

இந்தியன் ரயில்வேயில் வேலை வேண்டுமா? 3,996 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியன் ரயில்வேயில் 3,996 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

RRB Recruitment 2026 for 3,996 Junior Engineer Posts

இந்தியன் ரயில்வேயில் 3,996 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Indian Railway

Published On :4 செப்டம்பர் 2026, 11:00 am IST

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 3996 ஜூனியர் என்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே பணியில் சேருவதற்கான தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 04/2026

பணி: Junior Engineer

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Depot Material Superintendent

தகுதி: பொறியியல் துறையில் தாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Chemical & Metallurgical Assistant

தகுதி: இயற்பியல், வேதியியல் பாடங்கள் அடங்கிய ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரி பார்த்தல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு பின்னர், ரூ.500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.9.2026

விண்ணப்பிப்போரின் முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible candidates for the Junior Engineer and Depot Material Superintendent posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.