சாகித்ய அகாதெமியில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிக்கவும்!

சாகித்ய அகாதெமியில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியில் உள்ள சாகித்ய அகாதெமி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on



புதுதில்லியில் உள்ள சாகித்ய அகாதெமி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.50/04/2022

பணி: Sales-Cum-Exhibition Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Accountant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம் முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sub Editor(English)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் துணை ஆசிரியராக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Technical Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் புத்தக பதிப்பக பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Receptionist-Cum-Telephone Operator
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் EPABX-System பயன்படுத்துவதில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-II
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 25,400 - 81,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் EPABX-System பயன்படுத்துவதில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் அதனை தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு விவரம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் முலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The secretary,
Sahitya Akadenmi,
New delhi - 110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.11.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com