ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!


தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்)

பணி: கால்நடை ஆலோசகர் - 1

பணியிடங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவி.

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்சி., மற்றும் ஏஎச் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு குறித்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

சம்பளம்: தேர்வு செய்யப்படுவோருக்கு  மாதம் ரூ.43,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்: தகுதியானவர்கள் 07.12.2022 அன்று காலை 11 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com