மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட்மேன், மெயில்கார்டு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை போஸ்ட்மேன், மெயில்கார்டு பதவிகளுக்கான வரைவு ஆள்சேர்ப்புக்கான விதிமுறைகளை அஞ்சல் துறை வெளியிட்டது. அதில், பணி, பணியிடம், பணியின் வகைப்பாடு, சம்பளம், பணி நிபந்தனை காலம், தகுதி போன்ற நிலைகளில் பின்பற்ற வேண்டியதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது.
மேலும், வரைவு ஆள்சேர்ப்பு விதிமுறைகள் குறித்து 30 நாள்கள் அதாவது டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அனைத்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | ரூ.50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
மேலும் விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளன, முழுமையாகப் படித்து அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன் பின்னரே, 59,099 போஸ்ட்மேன் பணியிடங்கள், 1445 மெயில் கார்டு பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான விதிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.