கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
By | Published On : 19th November 2022 11:36 AM | Last Updated : 19th November 2022 11:36 AM | அ+அ அ- |

தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15.03.2023 அன்று காலை மதியம் என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும். வரும்17.12.2022 ஆம் தேதிக்குள்
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 22.12.2022 முதல் 24.12.2022 வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க | டிஆர்டிஓ-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பது?