மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 
மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1261

பணி: மெடிக்கல் ஆபிசர்(சுகாதாரத் துறை)
காலியிடங்கள்: 584

பணி: உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்(ரயில்வே)
காலியிடங்கள்: 300

பணி: மெடிக்கல் அலுவலர்(தில்லி முனிசிபல் கவுன்சில்)
காலியிடங்கள்: 376

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிப்படையில் கணக்கிடப்படும். 32, 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,  பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.5.2023

மேலும் விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com