ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 134

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேராசிரியர் - 23
பணி: உதவி பேராசிரியர் - 90
பணியிடம்: புதுச்சேரி ஜிப்மர்

பணி: பேராசிரியர் - 3
பணி: உதவி பேராசிரியர் - 18

தகுதி: மருத்துவத் துறையில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்.,உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.8.2023 தேதியின்படி, பேராசிரியர் பணிக்கு 58க்குள்ளும், உதவி பேராசிரியர் பணிக்கு 50க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: பேராசிரியர் பணிக்கு 11 ஆண்டுகள் கற்றல் அனுபவம் அல்லது ஆராய்ச்சி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் அல்லது ஆராய்ச்சி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in இணையதளத்தில் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய jipmer.edu.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com