அரசு போக்குவரத்துக்  கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் அறிவிப்பு: முழு விவரம்!

அரசு போக்குவரத்துக்  கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் அறிவிப்பு: முழு விவரம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 800 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 800 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் சுமார் 1484 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 203 ஓட்டுநர் காலி பணியிடங்களில் 60 சதவீதமான 122 ஓட்டுநர்களை மட்டும் பணியமர்த்தவும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அதே முறையில் ஓப்புதல் தந்க 800 பணியிடங்களில் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலி பணியிடங்களை மட்டும் நிரப்ப அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தற்போது 203 + 685 என 888 ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தித்தாளில் வெளியப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்களை இணைய வழி மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அரசு போக்குவரத்துக் கழக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தகுதி: ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.17,500 முதல் ரூ.56,200 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை இயக்குநர் தலைமையிலான தேர்வுக்குழு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னுரிமை: தகுதி, வயதுவரம்பு, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகுதித் திறன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகும் என தெரிகிறது. 

நீண்ட ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெறாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com