விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஒரு மணி நேரத்துக்கு  ரூ.800 சம்பளத்தில் பயிற்றுநர்கள் பணி!

தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தத் தகுதியான அனுபவமுள்ள பயிற்றுநா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஒரு மணி நேரத்துக்கு  ரூ.800 சம்பளத்தில் பயிற்றுநர்கள் பணி!
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தத் தகுதியான அனுபவமுள்ள பயிற்றுநா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆா்.பி., எஸ்.எஸ்.சி., ஆா்.ஆா்.பி., டி.ஆா்.பி. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்த வகுப்புகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனா். 
பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்றுநா்களுக்கு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்துக்கு இதுவரை ரூ.400 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை இப்போது ரூ.800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 

பயிற்றுநா்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் பி.பி.டி., மதிப்பீட்டு வினாக்கள், மாதிரித் தோ்வு வினாக்களை தயாா் செய்து தர வேண்டும். மதிப்பூதியத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு தோ்வுக்கும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளைக் கையாளும் வகையில் தரமான பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

எனவே, விருப்பமுள்ள பயிற்றுநர்கள் https://bit.ly/facultyregistrationform  என்ற கூகுள் இணைப்பில் விண்ணப்பத்தைப்  பூா்த்தி செய்து செய்து வருகிற 10-ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 04175 - 233381 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com