டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 3 ) தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 3 ) தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்(ஹால் டிக்கெட்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் 15.09.2022 இல் குரூப் 3 தேர்வு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 15 காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) வரும் 28.01.2023 அன்று நடைபெறவுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதார்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணை யத்தளங்கான www.tnpsc.gov.in, www.tnpscexams.inஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com