ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை(டிச.21) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.
ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை(டிச.21) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் அடங்கிய 4 ஜீப்பு ஓட்டுநர் பணிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் வியாழக்கிழமை(டிச.21) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் 1.7.2023 அன்றுள்ளபடி மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆதிதிராவிடர் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஊதியமாக ரூ.19,500 - 62,000 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் படி தமிழக அரசால் வழங்கப்பட்ட தகுதியான எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை https://dharmapuri.nic.in இணையதளம் அல்லது தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய www.ncs.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 13.11.2023 முதல் 21.11.2023 தேதி மாலை 5.45 -க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல், விவரங்களுக்கு https://dharmapuri.nic.in இணையத்த்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com