எழுத்துத் தேர்வு இல்லை... சென்னை ஐசிஎம்ஆர்-இல் பிளஸ் 2, டிஎம்எல்டி முடித்தவர்களுக்கு வேலை!

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தேசிய நேய்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) திட்ட உதவியாளர், களப்பணியாளர் பதவியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தேசிய நோய்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) திட்ட உதவியாளர், களப்பணியாளர் பதவியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நவ.30 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பர எண்.265/Projects/DABS/Phase-II/Nov./2023

பதவி: Project Assistant(Phiebotomist)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.31,000 + 12,000(எப்டிஏ)
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்எல்டி அல்லது டிஎம்எல்டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு செவிலியர் படிப்பை முடித்து ஒரு ஆண்டு ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பதவி: Field Worker
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.18,000+10,000(எப்டிஏ)
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுகாதாரம் தொடர்பான தரவு சேகரிப்பில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யபப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR - National Institute of Epidemilogy, R-127, Second Main road, Tamilnadu Housing Board, Ayapakkam, Chennai-600 077.

நேர்முகத்தேர்வுக்கு வருவோர் www.nin.res.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com