ரூ.81 ஆயிரம் சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? 

மும்பையில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக வரி உதவியாளர், ஹவில்தார் பதவியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பினை மும்பை வர
ரூ.81 ஆயிரம் சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? 
Published on
Updated on
1 min read


மும்பையில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக வரி உதவியாளர், ஹவில்தார் பதவியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பினை மும்பை வருமானவரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவ.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Tax Assistant
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 1 மணி நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பதவி: Havaldar
காலியிடங்கள்:11
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  விளையாட்டுத் தகுதி, சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதி பட்டியல் தேர்வு செய்யப்ப நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 1.4.2022 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் மாநில, பல்கலைக்கழக, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தது 3 ஆவது இடத்திலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mumbaicustomszone1.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Assistant/Deputy Commissioner of Customs, Personnel and Establishment Section, 8th Floor, New Customs House, Ballard Estate, Mumbai - 400 001.

மேலும் விவரங்கள் அறிய www.mumbaicustomszone1.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com