தமிழக அரசில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய மக்கள் திரள் போட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பணி
தமிழக அரசில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?


தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய மக்கள் திரள் போட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை சனிக்கிழமை(அக்.21) வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: மக்கள் திரள் போட்டியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், ஹோம் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பதவி: சமூக இயல் வல்லுநர் - 1
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800
தகுதி:  சமூக அறிவியல், குற்றவியல், வயது வந்தோர் கல்வி, சமூக பணி துறையில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோவுடன் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:  ரூ.100. இதனை இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது இணையவழி மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 இடங்களில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை  www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டும் 21.10.2023-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை  விண்ணப்பிக்க இயலும். 

கூடுதல், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com