அரிய வாய்ப்பு நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 2000 காலியிடங்களுக்கு 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) உதவி மேலாளர் பதிவியில் உள்ள 2000 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரிய வாய்ப்பு நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 2000 காலியிடங்களுக்கு 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) உதவி மேலாளர் பதிவியில் உள்ள 2000 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

அறிவிப்பு எண். CRPD/PO/2023-24/19 

பதவி: Probationary Officers 

காலியிடங்கள்: 2000

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டால், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் போன்ற தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.4.2023 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.41,960 - 63,840 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்டத் தேர்வுகளான முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவதாம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையங்கள்: முதல்நிலைத் தேர்வு மையங்கள் - சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர். 

முதன்மைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.9.2028

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com