புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 134
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேராசிரியர் - 23
பணி: உதவி பேராசிரியர் - 90
பணியிடம்: புதுச்சேரி ஜிப்மர்
பணி: பேராசிரியர் - 3
பணி: உதவி பேராசிரியர் - 18
தகுதி: மருத்துவத் துறையில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்.,உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.8.2023 தேதியின்படி, பேராசிரியர் பணிக்கு 58க்குள்ளும், உதவி பேராசிரியர் பணிக்கு 50க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: பேராசிரியர் பணிக்கு 11 ஆண்டுகள் கற்றல் அனுபவம் அல்லது ஆராய்ச்சி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் அல்லது ஆராய்ச்சி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in இணையதளத்தில் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய jipmer.edu.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.