இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ் சர்வீஸ்(ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: INDIAN FOREST SERVICE EXAMINATION

காலியிடங்கள்: 150 

தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விவசாயம், வனம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.

முதன்மைத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை மட்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2023 

மேலும் விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com