ராசிபுரம் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!

ராசிபுரம் பெண் கவுன்சிலர் தேவிப்பிரியா, அவரது கணவர் அருண் லால், மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது. 
குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ராசிபுரம் நகர மன்ற உறுப்பினர் தேவிப்பிரியா-அருண் லால்.

ராசிபுரம் நகர திமுக துணை செயலாளராக இருப்பவர் அருண் லால் (53). இவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவிப்பிரியா (46). இவர் ராசிபுரம் நகர மன்றத்தின் 13 ஆவது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா (18) உயிரிழந்த மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 

இந்த நிலையில் இவர்களது வீட்டில் அருன்லால், தேவிப்பிரியா, மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே. செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com