தேசிய தகவல் மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) காலியாக உள்ள விஞ்ஞானி, பொறியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தகவல் மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) காலியாக உள்ள விஞ்ஞானி, பொறியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist-‘B’
காலியிடங்கள்: 71

பணி: Scientific Officer/Engineer – SB
காலியிடங்கள்: 196

பணி: Scientific/Technical Assistant - ‘A’
காலியிடங்கள்: 331

தகுதி: பொறியியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 4.4.2023 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்குள்ளும், மற்ற பிரிவினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/nic என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com