மத்திய அரசு வேலை வேண்டுமா? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் நிறுவனமான மும்பை ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள 370 விமான தொழில்நுட்ப வல்லுநர், ஏவியோனிக்ஸ் பணி
மத்திய அரசு வேலை வேண்டுமா? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
Published on
Updated on
1 min read


விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் நிறுவனமான மும்பை ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள 370 விமான தொழில்நுட்ப வல்லுநர், ஏவியோனிக்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Aircraft Technician(Maintenances & Overhaul shops)
காலியிடங்கள்:199
சம்பளம்: மாதம் ரூ.25000
வயது வரம்பு:  01.03.2023  தேதியின் படி 35-க்குள் இருக்க வேண்டும்
தகுதி:  Aircraft Maintenances  Engineering பாடத்தில்  டிப்ளமோ முடித்து 1 ஆண்டு Aircraft Maintenances Technician பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanica,  Aeronautical  Engineering-ல் 3 ஆண்டு  டிப்ளமோ படிப்பை முடித்து Aircraft Maintenances துறையில் 1 ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 

பணி: Aircraft technician(Avionics)
காலியிடங்கள்: 97
சம்பளம்: மாதம் ரூ.25000
வயது வரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: Aircraft Maintenances  Engineering பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்து 1 ஆண்டு  Aircraft Maintenances Technician பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும் அல்லது  Electrical, Elecronics, Telecommunication, Radio, Instrumentation பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்து Aircraft Maintenances துறையில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician
காலியிடங்கள்: 74
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயது வரம்பு: 1.3.2023 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து Avionics துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiesl.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com