மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 11 மூத்த நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 11 மூத்த நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், மூத்த தொழில்நுட்ப மேற்பார்வையாளர், தனியார் செயலாளர், தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் நவ.27 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பகளில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இந்த பதவிகளுக்குகு தேர்வு செய்யப்படுவோருக்கு பதவியின் அடிப்படையில் சம்பளமாக மாதம் ரூ.35,400  முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.11.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு www.cpcb.nic.in இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com