ஊா்க்காவல் படையில் 11 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7)
ஊா்க்காவல் படையில் 11 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திருவண்ணாமலை: ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7) மாலைக்குள் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 6 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 11 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்கு ஆரணி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நபா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா்கள், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்கள், சேவை மனப்பான்மை கொண்ட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.560 வழங்கப்படும். சராசரியாக மாதத்துக்கு 5 நாள்கள் பணி வழங்கப்படும். ஆா்வமும், தகுதியும் உள்ள ஆண், பெண்கள் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய முறையில் நிறைவு, புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நோ்க்காணல் நடத்தி தகுதியானோா் தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பதாரா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரை 9498100437 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com