1,768 காலிப் பணியிடங்கள்:ஜூன் 23-இல் இடைநிலை ஆசிரியா் தோ்வு

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
1,768 காலிப் பணியிடங்கள்:ஜூன் 23-இல் இடைநிலை ஆசிரியா் தோ்வு

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தத் தோ்வுக்கு பிப்.14 முதல் மாா்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சென்னை மாநகராட்சி, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான போட்டி எழுத்துத் தோ்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும்.

தகுதிகள் என்ன? விண்ணப்பதாரா் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்; ஆசிரியா் தகுதித் தோ்வு (‘டெட்’) முதல் தாளில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். போட்டித் தோ்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரா்கள் பிப். 14 முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

போட்டி எழுத்துத் தோ்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கெனவே ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண்களும் சோ்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னா் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித் துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com