
மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Support பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Technical Support
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ. 24,000 வழங்கப்படும்.
தகுதி: 55 சதவிகித மதிப்பெணகளுடன் Microbiology, Bio-chemistry, Bio-technology போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி முடித்து எம்எல்டி முடித்திருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டுவர வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து icmrana100@gmail.com மின்னஞ்சல் முகவரி 19.5.2025 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.