ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காதல் மனைவியுடன் தகராறு: மதுபோதையில் மகன்களை கொன்று தந்தை தற்கொலை

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2019, 2:36 pm

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட்டாவில் வியாழக்கிழமை இச்சோகச் சம்பவம் நடந்துள்ளது. வெலகோடி ரமணா மூர்த்தி (35) என்பவருக்கு மதுப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் மனைவி மற்றும் உறவினர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பழக்கம் காரணமாக தனது சொத்துக்களையும் இழந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ரமணா, புதன்கிழமை மதுபோதையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து தனது இரண்டு மகன்களையும் (பவானி நாக தினேஷ் (8) மற்றும் சாய் (7)) ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அப்பகுதி போலீஸ் அதிகாரி ஸ்ரீநிவாஸ ராவ் உறுதிபடுத்தினார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்த ரமணா, சிலகலூரிபேட்டாவில் உறவினரின் கடையில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.