சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி பயணம்: சஞ்சய் ரௌத்

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

Published On :27 ஜனவரி 2024, 9:06 pm IST

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது,

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு 100-ஆவது நாளைக் குறிப்பிடும் விதமாக சிவசேனைக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார். இதில் அவருடன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில அமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக இங்கிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என சிவசேனையின் சாம்னா பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.