

நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி, அதில் செல்போன் எண் சேர்க்காமல் இருந்திருந்தால், உடனடியாக சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஓட்டுநர் உரிமத்தில் வேறு செல்போன் எண் இருந்து, அது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் புதிய செல்போன் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
அவ்வாறு செய்யப்பட்டால்தான், இ-செல்லான்கள், புதுப்பிக்க வேண்டிய அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தில் செல்போன் எண் இணைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பழைய எண் இருந்தாலோ, அதனை ஆன்லைன் மூலமாகவே இணைத்துக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள வாகனங்களுக்கான அரசின் இணையதளத்தில் இதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களுக்கான ஆர்சி புத்தகங்களிலும் பயன்படுத்துபவரின் செல்போன் எண்களைப் பதிவு செய்யவும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. சாலை விதிகளை மீறும்போது இ-செல்லான் அனுப்ப ஏதுவாகவும், முக்கிய அறிவுறுத்தல்களைப் பெறவும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தில் செல்போன் எண்ணை இணைக்க www.parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
அதில், ஓட்டுநர் உரிமம் என்ற சேவையைக் கிளிக் செய்யவும்.
அதில் அப்டேட் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தவும். அதில், அப்டேட் செல்போன் நம்பர் என்பதை கிளிக் செய்து, ஒருவர் தங்களது ஓட்டுநர் உரிமத்துடன் இருக்கும் செல்போன் எண்ணை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அதற்கு இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் முக்கிய விவரங்களான ஓட்டுநர் உரிம எண், பிறந்த தேதி, தற்போதைய செல்போன் எண் ஆகியவற்றை சரியாக உள்ளிடவும்.
பிறகு, உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை சரியாக பதிவிட்டால், ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண் இணைக்கப்பட்டு விடும். இதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண் இணைக்கப்பட்டுவிட்டால், மத்திய மாநில அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவைக் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வெள்ளி நகைகளை ஈடு வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.