
பல்வேறு வங்கிக் கணக்குகளை, ஒரே செல்போன் செயலி மூலம் ஒன்றிணைத்து, பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கிய அமைப்பே ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ).
பல்வேறு வங்கிகளின் சேவைகள், பணப் பரிவர்த்னைகள், வியாபாரிகளுக்கு பரிவர்த்தனை எளிதாக்குவது என அனைத்தும் ஒரே தளத்தில்.
என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 வங்கிகளை இணைத்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தைத் தொடங்கியது. அப்போது ஆர்பிஐ ஆளுநராக இருந்த டாக்டர் ரகுராம் ராஜன், மும்பையில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, வங்கிகள் தங்களது யுபிஐ முகவரிகள கொண்ட செயலிகளை கூகுள் பிளேவில் பதிவேற்றம் செய்தன.
இது முக்கியத்துவம் பெறுவது எப்படி?
365 நாள்களும் 24x7 என எந்த நேரமும், நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்தும் மற்றொரு வங்கிக்குப் பணம் அனுப்பலாம். பெறலாம்.
பல வகையான வங்கிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரிக்க ஒரே ஒரு செல்போன் செயலி.
ஒரே கிளிக், அடையாளத்தை உறுதி செய்யும் இரண்டு பாஸ்வேர்டுகள் - பணப்பரிமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.
வங்கிக் கணக்கு அட்டை எண், வங்கிக் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோடு என எதுவும் இல்லாமலேயே, வெறும் செல்போன் எண் மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்யலாம்.
க்யூஆர் கோடு மூலமாகவும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
கையில் எப்போதும் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இல்லை.
ஏடிஎம்-களுக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டாம்.
முன்னெச்சரிக்கையாக தேவையான அளவை விட அதிகப் பணத்தை எடுக்கும் நிலை தவிர்ப்பு.
மின் கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்த, நிதி வழங்குதல், நிதி வசூல் என அனைத்தும் ஒரு நொடியில் ஒரு செயலியில்.
செல்போன் செயலியிலிருந்தே புகார்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு பதிவு செய்வது?
சேவை தேவைப்படுவோர் தங்களது செல்போனிலிருந்து வங்கியின் இணையதளத்திலிருந்து அல்லது ஆப் ஸ்டோர்களிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பயனாளர் தனது பெயர், முகவரி ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.
பிறகு, ஆட் என்ற ஆப்ஷனில் சென்று லிங்க் / மேனேஜ் வங்கிக் கணக்கு என்பதை கிளிக் செய்து ஒருவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்து செயலியில் வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும்.
யுபிஐ - பின் உருவாக்குதல்
பயனாளர், பரிவர்த்தனையைத் தொடங்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின் எண்ணை உருவாக்க, வங்கிக் கணக்குடன் இணைத்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.
பிறகு, ஏடிஎம் அட்டையின் கடைசி ஆறு இலக்க எண்களையும் அந்த அட்டையின் காலாவதி தேதியையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
பிறகு, ஓடிபியை உள்ளிட்டு, பயனாளரே யுபிஐ பின் எண்ணை உருவாக்கிக் கொண்டு, சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.
இப்போது உறுதிப்படுத்துதல் தகவல் வரும்.
பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டு யுபிஐ சேவைக்குள் நுழையலாம். அதன்பிறகு, யாருக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் பயனாளர்கள் வங்கிக் கணக்கை நாடாமல், நேரடியாக யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்பலாம். பெறலாம்.
இதையும் படிக்க... சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா கும்பல்! எச்சரிக்கை!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.