ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

காணாமல் போன ஒருவரை இறந்தவராக அறிவிக்கும் சட்ட நடைமுறை என்ன?

காணாமல் போன ஒருவரை இறந்தவராக அறிவிக்கும் சட்ட நடைமுறை பற்றி..

 ordinary meanings in law

என்ன செய்ய வேண்டும்? - court

Published On :

காணாமல் போன ஒருவர், குறைந்தது 7 ஆண்டுகளாக குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளாமல், எங்கிருக்கிறார் என்பது அறியப்படாமல் இருந்தால், அவரை இறந்தவராக அறிவிக்க உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கு சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் எவ்விதத் தகவலும் இன்றி காணாமல் போவது என்பது வெறும் துயரம் மட்டுமல்ல, அதையும் தாண்டி, பல நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்களை உள்ளடக்கிய, வேதனைக்குரிய சம்பவமும்கூட,

குடும்பத்தில் ஒருவர் காணாமல் போனால், அவருடன் தொடர்பில் இருக்கும் சொத்து விவரங்களை தீர்ப்பது, வங்கிக் கணக்குகள், அவர் பெற்று வந்த ஊதியம் அல்லது ஓய்வூதியங்களை, அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினர் பெறுவது, சொத்து உரிமைகளை மாற்றுவது எனப் பல சட்டரீதியான சிக்கல்களும் உருவாகும்.

ஒருவர் இறந்துவிட்டால் அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கும் சட்ட நிவாரணம், காணாமல்போகும்போது கிடைப்பதில்லை. ஏனென்றால், காணாமல் போனவர் எங்கிருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாது, உடனடியாக அவர் இறந்துவிட்டார் என்றும் நிரூபிக்க முடியாது, அதே வேளையில், சொத்து, வங்கிக் கணக்குகள் போன்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு அவர்களை உயிருடன் இருப்பவராகக் கருதவும் முடியாமல், ஒரு இக்கட்டான நிலை ஏற்படும்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான், உரிமையியல் சட்டத்தின் கீழ் ஒருவரை சட்டப்பூர்வமாக இறந்தவராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் உதவுகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இச்சிக்கலுக்கான தீர்வு, சான்றுகளின் அடிப்படையில் கொள்ளப்படும் அனுமானங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் மூலம் குடும்பத்தினர் பெற முடியும்.

நீதிமன்றத்தை நாடி ஒருவர் இறந்ததாகப் பெறும் சட்டப்பூர்வ ஆவணமே பல துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். பெரும்பாலும் அரசுத் துறைகளை அணுகும்போது, இந்த நீதிமன்ற ஆவணங்கள்தான் செல்லுபடியாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 108-ன் கீழ் நிவாரணம் பெறலாம். அதாவது காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கான முதன்மையான சட்டம் 1872-ஆம் ஆண்டின் இந்தியச் சாட்சியச் சட்டத்தின் பிரிவு 108 ஆகும்.

இப்பிரிவு, மறுக்கப்படக்கூடிய இறப்பு அனுமானம் எனப்படும் சட்டக் கோட்பாட்டை உருவாக்குகிறது. ஒருவர் சாதாரணமாக இறந்துவிட்டால் அவரை இறந்தவராக அறிவிப்பதற்குப் பதிலாக, இச்சட்டம் 'நிரூபிக்கும் பொறுப்பை' மாற்றியமைக்கிறது.

சட்டத்தின்படி, ஒருவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்ற கேள்வி எழும். அந்த வேளையில் ​​அவரைப் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய குடும்பத்தினரால், கடந்த ஏழு ஆண்டுகளாக அவரைப் பற்றிய எந்தத் தகவலும் அறியப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, அவ்வாறு உயிருடன் இருக்கிறார் என வாதிடுபவர் பக்கம் மாற்றப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் இறந்தவராக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், குறைந்தது ஏழு ஆண்டுகளாவது அவர் குடும்பத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

அதாவது, ஒருவர் காணாமல் போயிருந்தால், இயல்பாக அவர் யாருக்கெல்லாம் தகவல் அளிக்க வாய்ப்பிருக்கிறதோ, அதாவது நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சமூக உறுப்பினர்கள் போன்றவர்களிடமிருந்து இந்தச் சான்று பெறப்படுகிறது.

எனவே, ஏழு ஆண்டுகள் ஒருவர் குடும்பம் அல்லது யாருடனும் தொடர்பு இல்லாத நிலையில் உள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டதும் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றால், அதனை நிரூபிக்கும் பொறுப்பு எதிர்த்தரப்புக்கு மாறும். ஆனால், அதற்குரிய ஆதாரங்களை யாரும், எந்த தரப்பினரும் அளிக்காவிட்டால், அவர் இறந்துவிட்டதாக நீதிமன்றம் கருதி, இறப்பு தேதி தெரியாததால், வேறு ஆதாரங்களையும் சேகரிக்க முடியாததால், இவ்வாறு வழக்குத் தொடரும் அனைவருக்கும் பொதுவாக ஒரு தேதி இருக்க வேண்டும் என்பதால், பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தேதியை இறப்பு நிகழ்ந்ததாகக் கருதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.