2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

2026 புத்தாண்டை வரவேற்கும் புகைப்படங்கள்..
2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கடைசி சூரிய அஸ்தமனம்!

குவாஹட்டியில் 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்.

வண்ணமயமான ஆண்டாக..

அமிர்தசரஸில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் வர்ணம் பூசி புத்தாண்டை வரவேற்றனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

அகமதாபாதில் ஹார்ட் வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டு, புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடினர்.

சிறகடிப்போம்..

பஞ்சாபின் பட்டியாலா நகரில் பெண்கள் ஒன்றிணைந்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

பூக்கள் பூக்கும் தருணம்!

ANI

புத்தாண்டு வருகையையொட்டி, லக்னௌவில் பூக்கள் விற்பனையும் அமோகம்.

இது நம்ம காலம்!

இந்தாண்டு சிறப்பான அமைய வேண்டும் என்பதை தொலைநோக்குப் பார்வையோடு கொண்டாடுகிறார்போல இவர்.

ஜெய் ஜெகந்நாத்!

மணற் சிற்பக் கலைஞரும் பத்ம ஸ்ரீ விருதாளருமான சுதர்சன் பட்நாயக், புரியில் ஜெய் ஜெகந்நாதர் சிற்பம் போன்று உருவாக்கி, புத்தாண்டை வரவேற்றார்.

தங்கப் புத்தாண்டு!

2026 ஆம் ஆண்டை, மின்னொளியின் மூலம் கவர்ந்திழுத்தது அமிர்தசரஸ் தங்கக் கோயில்.

அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி!

சர்வதேச மணற் சிற்பக் கலைஞரான மானஸ் குமார் சாஹு, உலக அமைதி விழிப்புணர்வுடன் புத்தாண்டை வரவேற்றார்.

ஸ்வீட் எடு, கொண்டாடு!

புத்தாண்டையொட்டி, பேக்கரிகளில் கேக் விற்பனையும் அமோகம்.

வருக புத்தாண்டு!

ANI

அமிர்தசரஸில் தங்கள் கைகளில் வர்ணம் பூசி, புத்தாண்டை பெண்கள் வரவேற்றனர்.

இன்றுமா?

ANI

லக்னௌவில் பாதுகாப்பான புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினரா என்று சோதனை செய்தனர்.

வணக்கம் 2026!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மத்தியில் மணாலியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து சென்றன.

இதையும் பார்க்க: 2025 கடந்து வந்த பாதை - புகைப்படங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com